மருத்துவக் கழிவுகள் கொட்டினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை
மருத்துவ கழிவுகளை கொட்டுபவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
மதுரை ஐகோர்ட்டில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கு வந்த லாரியை பிடித்த வழக்கு விசாரணைக்கு வந்தது . இந்த விசாரணையில் ஆலங்குளம் நீதிமன்றம் மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த லாரியை விடுவித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ கழிவுகளை கொண்டு வரும் வாகனங்களை மாநில அனுமதிக்க கூடாது என அரசு உத்தரவிட்டது. அதையும் மீறி தமிழகத்திற்குள் நுழைந்து மருத்துவ கழிவுகளை கேரள லாரி கொட்டி வருகிறது என வாதிடப்பட்டது.
இதனையடுத்து மருத்துவ கலைகளை கொட்ட வரும் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது குண்டு சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்றும் இதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Edited by Siva