திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 18 நவம்பர் 2023 (17:32 IST)

நீதிபதி தேர்வு.. 9 மாத கர்ப்பிணிக்கு சிறப்பு அனுமதி அளித்த நீதிமன்றம்..!

நீதிபதி தேர்வு எழுதும் கர்ப்பிணி பெண்ணுக்கு சிறப்பு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் காலியாக இருக்கும் நீதிபதி பணிகளுக்கு இரண்டு கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டது. முதல் கட்ட தேர்வு ஜூலை 23ஆம் தேதி நடந்த நிலையில் அதில் பிரதான தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பெங்களூரில் இன்றும் நாளையும் தேர்வு நடைபெறுகிறது 
 
இந்த நிலையில் இந்த தேர்வில் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றிருந்த மங்களூரை சேர்ந்த நேத்ராவதி என்பவர் தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர் தேர்வு எழுத மங்களூரில் இருந்து பெங்களூருக்கு வர முடியாத நிலையில் இருப்பதால் தனது சொந்த மாவட்டத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார் 
 
அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு சிறப்பு அனுமதி அளித்து அவர மங்களூரில் தேர்வு எழுத அனுமதி அளித்தது. நீதிமன்ற தேர்வில் முதல்முறையாக சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran