1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2023 (20:36 IST)

தமிழக அரசுக்கு யோசனை கூறிய நீதிபதி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம்விடும்போது கிடைக்கும் பணத்தில் தமிழ்நாட்டில் கழிவறைகள் கட்டலாமே என   கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சொத்துகள் மதிப்பீடு அறிக்கையை பெங்களூரு உயர்  நீதிமன்றத்தில்  தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம்விடும்போது கிடைக்கும் பணத்தில்  அபராதத் தொகை, நீதிமன்றச் செலவுத் தொகை, போக  மீதமுள்ள பணத்தில் மதமிழ்நாட்டில் கழிவறைகள் கட்டலாமே என   கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி மோகன்  யோசனை கூறியுள்ளார்.