Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை திமுக எம்.எல்.ஏ வீட்டின் முன்பு தீக்குளித்த நிர்வாகி உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்..!

Written By Siva
Updated: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (09:21 IST)
மதுரையில், எம்.எல்.ஏவும், திமுக மாவட்ட செயலாளருமான தளபதி வீட்டின் முன்பு நேற்று தீக்குளித்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்ற அதிர்ச்சி செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை மானகிரி கணேசன் என்பவர் எம்.எல்.ஏவும், திமுக மாவட்ட செயலாளருமான தளபதி  வீட்டின் முன் தீக்குளித்த நிலையில், படுகாயங்களுடன் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரது உடலில் 90 சதவீதத்திற்கு மேல் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளருமான கோ.தளபதியின் வீடு திருப்பரங்குன்றம் மூலக்கரையில் உள்ள நிலையில் அங்கே வந்த மதுரையை சேர்ந்த  திமுக பிரமுகர் கணேசன்  திடீரென எம்.எல்.ஏ தளபதி வீட்டு வாசலில் நின்றபடி திடீரென தற்கொலைக்கு முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள்  அதிர்ச்சி அடைந்து, கணேசனை காப்பாற்ற முயற்சி செய்வதற்குள் அவரது உடல் முழுவதும் தீக்காயம் பரவியது. இதையடுத்து கணேசன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

Edited by Siva

எல்லாம் காட்டு

அடுத்த பிரதமர் யார்?.. 3வது இடத்தில் ஜோசப் விஜய்!.. கருத்துக்கணிப்பில் தகவல்!..

அதிக அளவில் சொத்து வரி பாக்கி வைத்துள்ள 100 பேரின் பட்டியல்.. திமுக அலுவலகம் முதலிடம்...

உதயநிதி, எடப்பாடி பழனிசாமி இருவரும் கொண்டு வந்த ஒரே கவன ஈர்ப்பு தீர்மானம்... அரசின் பதில் என்ன?

விமான நிலையத்தில் கொசு கடித்ததால் இறந்த 2 ஊழியர்கள்.. விசாரணைக்கு உத்தரவு...!

ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பங்கேற்ற 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்.. கல்வித்துறையின் அதிரடி நடவடிக்கை...

அடுத்த கட்டுரையில்
Show comments