Daily Horoscope
✕

இதற்காகத்தான் கொள்ளையடித்தேன்!.. நிஷாந்த் வாக்குமூலம்...

Updated: செவ்வாய், 17 நவம்பர் 2026 (14:44 IST)
மதுரை தனிஷ்க் நகைக்கடையில் 11.3 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கனவே யுடியூபர்,  இன்ஃபுளூயன்சர் மீனாட்சி மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நிஷாந்துக்கு உதவிய அவரின் தந்தை இருவரையும் போலீசார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்திருந்தனர்.

தலைமறைவாக இருந்த நிஷாந்தை போலீசார் தேடி வந்த நிலையில் பெங்களூரிலிருந்து சேலத்திற்கு ஆம்னி பேருந்தில் நிஷாந்த் சென்ற போது பேருந்து ஓட்டுநர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரை தர்மபுரியில் போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே மீனாட்சி காட்டிய இடத்தில் 5 கிலோ நகைகள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது நிஷாந்த் மூலம் மேலும் 6.3 கிலோ நகைகள் மீட்கப்பட்டிருக்கிறது. நேற்று இரவு விடிய விடிய நிஷாந்திடம் தீவிர விசாரணையும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்கரிடம் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் ‘தனது கடன் பிரச்சனை காரணமாகத்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக நிஷாந்த் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொடக்க விசாரணையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மீனாட்சிக்கும் தெரியும் என்பது தெரியவந்துள்ளது. ஆனாலும் அவர் தகவல் அளிக்காமல் இருந்துள்ளார்.. கொள்ளையடிக்கப்பட்ட பாதி நகைகள் எங்கு இருந்தன எனும் மீனாட்சிக்கு தெரிந்திருக்கிறது’ என்று அவர் கூறியிருக்கிறார்.<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

இதற்காகத்தான் கொள்ளையடித்தேன்!.. நிஷாந்த் வாக்குமூலம்...

மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா ஒத்தி வைப்பு.. பின்னணி என்ன?..

1 மணி நேரத்தில் 1 கோடி கொள்ளை!.. வங்கி கணக்கை ஹேக் செய்த கும்பல்...

திருச்சி செல்லும் முதல்வர் விஜய்!.. இடைத்தேர்தல்தான் காரணமா?..

முதுமலை காட்டில் டிரக்கிங்!.. சர்ச்சைக்கு விளக்கமளித்த வன்னியரசு...

அடுத்த கட்டுரையில்
Show comments