மதுரையை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்; சிறுவன் பலியால் பரபரப்பு!

Dengue
Prasanth Karthick|
கொரோனாவை தொடர்ந்து மதுரையில் பரவியுள்ள டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பிலிரிந்தே நாடு இன்னும் மீளாத சூழலில் பறவைக்காய்ச்சல் போன்ற புதிய வியாதிகளும் பரவி வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மதுரையில் பரவியுள்ள டெங்கு காய்ச்சல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சி ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் திருமலேஷ் டெங்கு பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதை தொடர்ந்து இறந்த சிறுவனின் சகோதரனுக்கும் டெங்கு கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மதுரையில் டெங்கு பரவாமல் இருக்க கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :