மக்கள் நம்பிக்கை வைக்கணும்.. அதான் முக்கியம்! – தடுப்பூசி போட்ட அமைச்சர் அறிவுரை!

vijayabashkar
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 22 ஜனவரி 2021 (11:28 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் தற்போது தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், மக்கள் கொரோனா தடுப்பூசிகளை கண்டு பயப்படுவதால் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.

அப்போது பேசிய அவர் “நானும் இந்த தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். எனவே இனிமேல் யாரும் தடுப்பூசி குறித்த வதந்தியை பரப்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். முன்னுதாரணமாக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே நானே தற்போது இந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளேன். எனவே மக்கள் நம்பிக்கையோடு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :