ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick

தமிழகம் முழுவதும் 42 ஆயிரத்திற்கும் மேல் தடுப்பூசி! – மத்திய சுகாதாரத்துறை தகவல்!

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் அதுகுறித்த பட்டியலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் 1 கோடியை தாண்டியுள்ள நிலையில் கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மொத்தமாக இதுவரை 10.43 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 42,947 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.