கோமியம் குடித்தால் கொரோனா வராது என்று கூறிய பாஜக எம்பிக்கு கொரோனா!
கோமியம் குடித்தால் கொரோனா வராது என்று கூறிய பாஜக எம்பி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர். இவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
கடந்த ஆண்டு பேட்டியளித்த பாஜக எம்பி சாத்வி பிரக்யா தான் தினமும் கோமியம் குடிப்பதால் கொரோனா தனக்கு வராது என்று கூறிய நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது