வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 அக்டோபர் 2021 (09:09 IST)

பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதம்! என்ன காரணம்?

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு ஊராட்சி உள்ள தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதமாக வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக குன்றத்தூர், மரக்காணம், காட்பாடி ஆகிய ஒன்றியங்களில் இன்னும் வழங்கப்படவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது. 
 
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்றும் சாப்பாடு கழிப்பறை போன்ற வசதிகள் இல்லை என்றும் குன்றத்தூர் பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் அதிகாரிகள் போராட்டம் நடத்தி வருவதால் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை 
 
அதேபோல் பல வாக்கு எண்ணிக்கை மையங்களில் சமூகம் இடையே இடைவெளி இல்லாமல் நெருக்கடியாக நிற்க வேண்டியுள்ளதாக முகவர்கள் புகார் அளித்ததால் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு அவர்கள் வாக்கு எண்ணிக்கை அனைத்து பகுதிகளும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது