உள்ளாட்சி தேர்தல்: தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை
தமிழகத்தில் கடந்த ஆறாம் தேதி மற்றும் 9ஆம் தேதி நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முன்னிலை நிலவரங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தபால் ஓட்டுகள் முடிவுகளில் வெளியான தகவலின்படி ஒன்றிய வார்டு கவுன்சிலர் தேர்தலில் ஐந்து இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது
அதேபோல் மாவட்ட ஊராட்சி தேர்தலில். கள்ளக்குறிச்சி பகுதியில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர்கள் இருவர் முன்னிலை பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் தபால் ஓட்டு எண்ணிக்கை முடிந்து வாக்குச்சீட்டு எண்ணிக்கையை தொடங்கியவுடன் மேலும் பல இடங்களில் தான முன்னிலை நிலவரம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது