உள்ளாட்சி தேர்தல்: திமுக சார்பில் வார் ரூம்!
தமிழகத்தில் வரும் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில்.திமுக தலைமை உடன்பிறப்புகளுக்கு ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் செயல்பாடுகளுக்கான அண்ணா அறிவாலயத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது எனவும், தேர்தல் நடைபெறும் இடங்களில் இருந்து வரும் புகார்களைத் தெரிவிக்க 88388 09244,88388 09285 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்
எனத் தெரிவித்துள்ளது.