புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (12:16 IST)

எதா தேறுமா? செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள்!!

அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 15 தீர்மானங்களின் பட்டியல் இதோ...  
 
அதிமுக செயற்குழு இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் 15 நீர்மானங்கள் அதிமுக சார்பில் நிறைவேற்றப்பட்டது. அவை பின்வருமாறு... 
 
1. கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் முதல்வர், துணை முதல்வர், கழக உடன்பிறப்புகளுக்கு பாராட்டு.
 
2. கொரோனா வைரஸிற்கு எதிரான பணியில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கு நன்றி.
 
3. கொரோனா நிவாரணத்திற்கும், தடுப்பிற்கும் மத்திய அரசு உரிய நிதி ஆதாரத்தை வழங்க வேண்டும்.
 
4. தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனடியாக தர வேண்டும்.
 
5. பொருளாதார வல்லுநர் தலைமையில் 24 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்த தமிழக முதல்வருக்கு பாராட்டு.
 
6. இருமொழிக் கொள்கையே அதிமுகவின் நிலைப்பாடு. தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே பின்பற்றப்படும் என தீர்மானம். 
 
7. நீட் தேர்வு முறையைக் கைவிடுமாறு மத்திய அரசை அதிமுக கோருகிறது. 
 
8. பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கியற்கு நன்றி.
 
9. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை காப்பாற்றிய அரசுக்கு நன்றி.
 
10. தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரி, 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி.
 
11. விவசாயிகள் நலன்கருதி நடப்பாண்டில் 50,000 பம்பு செட்டுகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கியதற்கு நன்றி.
 
12. காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு கண்டனம். 
 
13. கலாச்சாரத்தை ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழுவில் தமிழர்களை நியமிக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துகிறது.
 
14. மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர்ந்திட ஒற்றுமையாக உழைக்க தீர்மானம். 
 
15. எம்.ஜி.ஆர், ஜெ. நினைவிடம் அமைத்ததற்கும், 14 கோடி ரூபாய் செலவில் காவிரி - தெற்கு வெள்ளாறு -  வைகை - குண்டாறி இணைப்பு திட்டத்திற்கும் நன்றி.