1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 15 resolutions passed in ADMK Executive Committee Meeting

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான்... அதிமுக கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Edappadi Palaniswami
அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணி பேச்சு வார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  
 
இந்நிலையில் அதிமுக செயற்குழு இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் முதல்வர் வேட்பாளர் யார் ? கட்சிக்கு ஒற்றை தலைமையா ?  11 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும் சூழ்நிலையில்  நடைபெறுகிறது. 
 
தற்போதைய தகவலின் படி அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டுள்ளதாம். தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என தீர்மான நிரைவேற்றப்பட்டது. மேலும் மீதமுள்ள தீர்மானங்கள் குறித்த தகவல் அடுத்தடுத்து என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
கெத்து காட்டும் ஓபிஎஸ்... ஆளுயர மாலை, மூகமூடி, போஸ்டர்னு கலக்கல் வரவேற்பு!!