ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 29 ஜூலை 2023 (12:48 IST)

‘’தேசிய மாடல் ஒழியட்டும்’’ அண்ணாமலை நடைபயணத்தில் அர்ஜூன் சம்பத் கோஷம்! வைரல் வீடியோ

arjun sambath
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின்  ‘’என் மண் என் மக்கள் ‘’ பாத யாத்திரை தொடக்க விழா  நேற்று ராமேஸ்வரத்தில்  நடந்தது.
 

இந்த யாத்திரையின் தொடக்க விழாவிற்கு என்டிஏ கூட்டணியில் முக்கிய  தலைவர்கள் விருந்தினர்களாக அழைப்பட்ட நிலையில், முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மத்திய அமைச்சர் அமித்ஷா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அண்ணாமலையில் யாத்திரை தொடக்கவிழா நிகழ்ச்சியில்  திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அண்ணாமலையில் ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை மேற்கொள்ள நிலையில், யாத்திரை தொடக்க விழாவில் இன்று அப்பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள் வீட்டிற்குச் சென்று அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தொண்டர்கள்  தேநீர் அருந்தினர்.

இந்த நிலையில், அண்ணாமலையின் பாதயாத்திரை பயணத்தில் கலந்துகொண்ட அர்ஜூன் சம்பத், தேசிய மாடல் ஒழியட்டும் என்று கோஷமிட்டார். இதையே அவருடன் வந்த தொண்டர்களும் கூற முயன்றனர். உடனே சுதாரித்துக்கொண்ட அர்ஜூன் சம்பத், அவர்களிடம் அப்படிக் கூறவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த வீடியோ வைரலாகி வருகிறது.