1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 17 ஜூலை 2023 (17:05 IST)

சாலையில் போதையில் தள்ளாடும் இளைஞர்கள்- வைரலாகும் வீடியோ

Philadelphia
ஐக்கிய அமெரிக்காவின் பெல்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் பிலடெல்பியாவில் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் பெல்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் பிலடெல்பியா ஆகும்.

இது அமெரிக்காவின் ஆறாவது பெரிய நகரமும், ஏழாவது மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரம் இது.

இந்த  நிலையில் அமெரிக்காவின் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகும்  நிலையில், இதேபோல், பிலடெல்பியாவின் நகரில் போதை பொருள் பயன்பாடு  அதிகரித்துள்ளது.

இணையதளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில்  இளைஞர்கள் சிலர் போதையில் அங்குள்ள தெருவில்  நடக்க முடியாமல் தடுமாறி நிற்பது போன்ற போன்ற காட்சி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.