டாஸ்மாக் திறந்தும் கடை பக்கம் வராத மதுப்பிரியர்கள்?

திங்கள், 14 ஜூன் 2021 (15:01 IST)
ஊரடங்கு தளர்வுகளால் மதுரையில் மதுபான கடைகள் திறந்தும் குறைந்த அளவிலயே வருகை தந்த மதுப்பிரியர்கள். 

 
கொரோனா ஊரடங்கில் இன்று முதல் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் மதுரையிலுள்ள அனைத்து மதுபானகடைகளும் திறக்கப்பட்டன. கடைகள் முன்பாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு மதுப்பிரியர்கள் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் முதல்நாளான இன்று கடையை திறக்கும் முன்பாக திமுக உறுப்பினர் ஒருவர் கடைக்கு சூடம் ஏற்றி பூ தூவி கும்பிட்டு பின் மதுவை வாங்கி மதுபாட்டில்கள் முன்பாக தரையில் விழுந்து கும்பிட்டுசென்றார். 
 
தொடர்ந்து ஏராளமான தொழிலாளர்களும், இளைஞர்களும் காத்திருந்து மதுவை வாங்கி சென்றனர். பின்னர் நேரம் செல்ல செல்லை கூட்டம் குறைந்து மதுபிரியர்களின் வரத்த்து குறைந்தது.  கொரோனா பரவல்  15 ஆயிரம் அளவிற்கு குறைந்த நிலையில் தற்போது மதுபானகடைகள் திறக்கப்பட்டது பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments