என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார் லட்சுமி நாராயணன் !
லட்சுமி நாராயணன், ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில் அவரது ராஜினாமா குடியரசுத் தலைவரால் ஏற்கப்பட்டது. எதிர்க்கட்சிகளும் புதுச்சேரியில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என அறிவித்ததை அடுத்து புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
அடுத்தடுத்து எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ததால் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க தவறி ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில், புதுச்சேரியில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன், ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.