செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (09:22 IST)

புதுச்சேரி ஆட்சி கவிழ்ப்பிற்கு கிரண்பேடி மறுப்பு : நாராயணசாமி தகவல்!

புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பிற்கு முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்ததாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தகவல். 

 
சென்னை சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னள் முதலமைச்சர் நாராயணசாமி , புதுச்சேரி தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பேசியது பொய் என்றும் தேர்தல் நேரத்தில் மக்களை திசை திருப்பும் விதமாக, 98 சதவீதம் தமிழகத்தில் வரும் திட்டங்களை புதுச்சேரியில் துவக்கி வைத்துள்ளார் பிரதமர். 
 
மேலும் அருணாசல பிரதசம், மணிப்பூர், கோவா, கர்நாடக, மத்திய பிரதேச, புதுச்சேரியில் பல ஆயிரம் கோடி செலவு செய்து காங்கிரஸ் ஆட்சியை பாஜக கவிழ்த்துள்ளது என குற்றஞ்சாட்டினார். மத்திய அரசு 15 ஆயிரம் கோடி புதுச்சேரி அரசுக்கு வழங்கியது என்றும் இந்த பணத்தை டெல்லியில் உள்ள சோனியா காந்தி குடும்பத்திற்கு வழங்கினேன் என அமித்ஷா பொய்யான குற்றச்சாட்டை வைத்துள்ளார். 
 
வருமான வரித்துறை, சிபிஐ கையில் வைத்துள்ள அமித்ஷா இந்த குற்றசாட்டை அமித்ஷா நிரூபிக்க முடியுமா என சவால் விடுத்துள்ளார். மேலும், அமித்ஷாவின் குற்றச்சாட்டை நிருபிக்கா விட்டால் அவதூறு வழக்கை தொடர்வேன் என தெரிவித்தார். மேலும், புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பிற்கு முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் நாராயணசாமி பேசினார்.