செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (13:42 IST)

பெண் காலவருக்கு கத்திக்குத்து: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பரபரப்பு!

knife
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் பெண் காவலரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் பெண் காவலர் ஒருவர் பணியில் இருந்தார். அப்போது பெண்கள் கோச்சில் ஆண்கள் சிலர் ஏற முயன்றதை அவர் தடுத்துள்ளார்கள் 
 
பெண்கள் கோச்சில் ஆண்கள் ஏறக்கூடாது என கூறியதால் ஆத்திரமடைந்த மர்ம நபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண் காவலரின் கழுத்து மார்பு பகுதியில் குத்தி விட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது
 
கத்திக்குத்து  காரணமாக ரத்த வெள்ளத்தில் மிதந்த பெண் காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரை தாக்கிய மர்ம நபரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கான சிசிடிவி காட்சிகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது