1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (12:34 IST)

உணவின் தரம் குறித்து குற்றம்சாட்டிய காவலருக்கு கட்டாய பணி விடுப்பு!

UP police
உணவின் தரம் குறித்து குற்றம்சாட்டிய காவலருக்கு கட்டாய பணி விடுப்பு!
உணவின் தரம் குறித்து குற்றம்சாட்டிய உத்தரபிரதேச மாநில காவலர் நீண்ட விடுப்பில் கட்டாயமாக பணி விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த காவலர் மனோஜ் என்பவர், ‘12 மணி நேரம் வேலை வாங்குவார்கள் என்றும் மோசமான உணவு வழங்குகிறார்கள் என்று கதறி அழுத வீடியோ இணையதளங்களில் வைரலானது.
 
இதனை அடுத்து உத்திரப்பிரதேச மாநில காவல்துறை மீது நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் உணவின் தரம் குறித்து குற்றம்சாட்டிய உத்தரப்பிரதேச காவலர் மனோஜ் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறி பணியை விட்டு நீக்க மூத்த காவல் அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர் என மனோஜ்குமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது