செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2022 (21:18 IST)

ஸ்ரீரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பணியில் இருந்த காவலர் உயிரிழப்பு

srivillipudhur
விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பணியில் இருந்த காவலர் உயிரிழப்பு..... 
 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் உள்ள புறக்காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் மோகன் மயங்கி விழுந்து உயிர் இழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் வளாகத்தில் புறக்கவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் மோகன் என்ற தலைமை காவலர் தினம்தோறும் பகல் மற்றும் இரவு பாதுகாப்பு பணிகளில் பணியாற்றி வருவது வழக்கம்.இவருக்கு இருதய கோளாறு இருந்ததால் சில வருடங்களுக்கு முன்பு ஏற்கனவே ஆஞ்சியோகிராம் சிகிச்சை இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இன்று ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது  கோவில் வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக சக காவலர்கள் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது அவரது உயிர் பிரிந்தது. தொடர்ந்து அவரது பிரேதத்தை பெற்றுக் கொண்ட அவரது உறவினர்கள் சொந்த ஊராண நத்தம்பட்டிக்கு கொண்டு சென்றனர். இவருக்கு மீனாகுமாரி என்ற மனைவியும் செல்வி என்ற மகளும் உள்ளனர்.