வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (12:07 IST)

காதலியுடன் லாட்ஜில் உல்லாசமாக இருந்த சிறைக்கைதி: உடந்தையாக இருந்த 3 காவலர்கள் மீது நடவடிக்கை!

சிறைக்கைதி ஒருவர் லாட்ஜில் காதலியுடன் உல்லாசமாக இருக்க மூன்று காவலர்கள் உதவி செய்ததை அடுத்து அந்த மூன்று காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கொலைக் குற்றத்திற்கு ஆளாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பச்சா கான் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கடந்த 2009ஆம் ஆண்டு விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் பச்சாகானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவலர்கள் அழைத்து சென்றபோது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லாமல் பச்சானின் வேண்டுகோளை ஏற்று லாட்ஜுக்கு காதலியுடன் உல்லாசமாக இருக்க அழைத்துச் சென்றனர்
 
இதுகுறித்த தகவல் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்ததை அடுத்து அதிரடியாக சோதனை செய்தபோது தனது காதலியுடன் பச்சாகான் பிடிபட்டார். இதனை அடுத்து பச்சாகானை மீண்டும் கைது செய்த காவல்துறையினர் இதற்கு உடந்தையாக இருந்த மூன்று காவல்துறையினர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.