திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 15 ஏப்ரல் 2023 (11:45 IST)

அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியல்.. திமுகவை அடுத்து அதிமுகவும் பதிலடி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்ட நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி அதற்கு பதிலடி கொடுத்திருந்தார். அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலுக்கு ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர் தமிழகம் முழுவதிலும் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் அண்ணாமலை நேற்று பேட்டி அளித்தபோது திமுக மட்டும் இன்றி இதற்கு முன்பு ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் சொத்து பட்டியலும் வெளியிடப்படும் என்று அதிமுக குறித்த அவர் மறைமுகமாக தெரிவித்து இருந்தார். 
 
இதற்கு அதிமுகவின் கேபி முனுசாமி இன்று பதிலடி கொடுத்துள்ளார். தான் மட்டுமே நாட்டுக்காக உழைக்க பிறந்தவர் என்பது போல அண்ணாமலை பேசுகிறார் என்றும் நாட்டுக்காக உழைத்த தலைவர்கள் அரசியல்வாதிகள் மக்கள் பலர் இருக்கின்றனர் என்றும் அவர் ஏதோ கூறுகிறார் அவர் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran