கோடநாடு வழக்கில் யார் குற்றவாளி என்பது எடப்பாடிக்கு தெரியும்: கோவை செல்வராஜ்
கோடநாடு, கொலை கொள்ளை வழக்கில் யார் குற்றவாளி என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் என கோவை செல்வராஜ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம் என கூறிய கோவை செல்வராஜ் அதிமுகவை கைப்பற்றும் எடப்பாடி பழனிசாமியின் நோக்கம் நிறைவேறாது என்றும் தெரிவித்தார்.
மேலும் இன்றைய பொதுக்குழுவில் 700 பேர் மட்டுமே பங்கேற்றனர் என்றும், மனசாட்சி உள்ள அதிமுக உறுப்பினர்கள் பொதுக்குழுவுக்கு செல்லவில்லை என்றும் கோவை செல்வராஜ் பேட்டியில் கூறியுள்ளார்.