1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 11 ஜூலை 2022 (20:37 IST)

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பி.எஸ். தரப்பில் பதில் மனு

OPS
இந்திய தேர்தல் தலைமை ஆணையத்திற்கு ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது என்பதும் இது குறித்து நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவில் சட்ட விதிகள் மீறப்பட்டதாக குற்றஞ்சாட்டி ஓபிஎஸ் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது 
 
அதிமுக பொதுச்செயலாளர் தேர்வை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்றும் அதற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும் ஓபிஎஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது 
இந்த மனு மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.,