புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 ஜனவரி 2020 (11:04 IST)

ரஜினி துக்ளக் பக்கத்தை காட்டாதது ஏன்? – கொளத்தூர் மணி கேள்வி!

துக்ளக் விழாவில் பேசியதற்கு அவுட்லுக் பத்திரிக்கையை ஆதாரமாக காட்டிய ரஜினி துக்ளக்கை காட்டாதது ஏன் என கொளத்தூர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

துக்ளக் 50வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் 1971ல் சேலத்தில் பெரியார் ஊர்வலத்தில் ராமர், சீதை படங்களுக்கு செருபை அணிவித்து கொண்டு சென்றதாகவும், அதை துக்ளக் பத்திரிக்கை மட்டும் துணிவோடு எதிர்த்து செய்தி வெளியிட்டதாகவும் பேசி இருந்தார்.

பெரியார் குறித்த ரஜினியின் பேச்சுக்கு பெரியார் திராவிட கழகம் கண்டனம் தெரிவித்தது. மேலும் ரஜினியின் பேச்சு ஆதாரம் இல்லாதது என்றும், திரித்து கூறப்படுவது என்றும் பலர் குற்றம் சாட்டினர். மேலும் ரஜினி தனது பேச்சுக்கு நிபந்தைனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தின.

தற்போது 1971 ஊர்வலம் குறித்து அவுட்லுக் பத்திரிக்கையில் வெளியான செய்தியை ஆதாரமாக காட்டி மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி மறுத்துள்ளார். அதற்கு பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த கொளத்தூர் மணி பேசியபோது ”துக்ளக்கில் மட்டுமே செய்தி வெளியானது என்றுதானே கூறினார். பிறகு ஏன் துக்ளக் பத்திரிக்கையில் வெளியான செய்தியை எடுத்து காட்டவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் ரஜினி – பெரியார் திராவிட கழகம் இடையேயான கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.