20 ரூபாய்க்கு விற்ற தக்காளி வெறும் 6 ரூபாய்! – கோயம்பேடு மார்க்கெட்டில் விலை சரிவு!
தக்காளி வரத்து அதிகரிப்பாலும், விற்பனை குறைவாலும் விலை வேகமாக சரிந்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் சில்லரை மற்றும் மொத்த காய்கறி விற்பனையின் முக்கிய பகுதியாக உள்ளது. கடந்த வாரங்களில் தக்காளி கடைகளில் கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகி வந்தது.
இந்நிலையில் இந்த வாரம் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகமாக உள்ள நிலையில் சில்லறை விற்பனையாளர்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் 14 கிலோ பெட்டி தக்காளில் அதிரடியாக விலை குறைந்து ரூ.80க்கு விற்பனையாகியுள்ளது.
இதனால் தக்காளில் விலை சில்லறை விற்பனையில் மிகவும் குறைந்து ரூ.6க்கு விற்பனையாகி வருகிறது.