புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: சனி, 8 பிப்ரவரி 2020 (20:12 IST)

எதிர்கட்சியினர் பாராட்டும் அளவிற்கு கரூர் மருத்துவக் கல்லூரி -அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்

எதிர்கட்சியினர் பாராட்டும் அளவிற்கு கரூர் மருத்துவக் கல்லூரி அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்
கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியம் காணியாளம்பட்டி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 2017 - 2018,  2018 - 2019 ஆகிய ஆண்டுகளில் படித்த 203 மாணவ - மாணவிகளுக்கு 25 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகளை போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வழங்கினார்.  
 
மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தமிழகம் இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக உள்ளது. மாணவ மாணவிகளின் கல்விக்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு பல திட்டங்களை கொண்டுவந்துள்ளது கடந்த ஒன்பது ஆண்டுகளாக மடிக்கணினி வழங்கி வருகிறது. 
 
கல்வித் துறைக்காக தமிழக அரசு 28 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கியுள்ளது. இந்திய அளவில் போக்குவரத்து துறையில் 11 விருதுகளை தமிழகம் பெற்றுள்ளது. இதுதவிர வருவாய்த்துறை உணவு வழங்கல் துறை உயர் கல்வித் துறையில் தமிழகம் அதிக முன்னேறிய மாநிலமாக உள்ளது. 
 
சுயநிதி கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கரூர்மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் 150 மாணவர்கள் படிக்கும் வகையில் அவர்களுக்கு கல்வி மேம்பாடு செய்யும் வகையில்  அம்மா 300 கோடி ஒதுக்கி உள்ளார். 
 
அதி நவீன தொழில்நுட்ப மருத்துவக் கருவிகள் கொண்ட மருத்துவமனையாக கரூர் மருத்துவமனை விளங்கிவருகிறது. இதை சட்டமன்ற ஆய்வுக் குழுவில் வந்திருந்த சட்டமன்ற எதிர்க் கட்சியினர் கூட பாராட்டி உள்ளனர். இன்ஜினியரிங் படிப்பை விட தொழில்நுட்ப படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது எனவே இதை பயன்படுத்தி மாணவர்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.