கரூரில் சட்ட விரோத சேவல் சண்டை! 10 பேர் கைது!

Cock Fight
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 17 ஜனவரி 2020 (09:49 IST)
கரூரில் சட்டவிரோதமாக பல்வேறி இடங்களில் நடத்தப்பட்ட சேவல் சண்டையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டி பிரபலமாக இருப்பது போல சேவல் சண்டையும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. கடந்த 2014ல் கரூரில் நடந்த சேவல் சண்டையில் சேவல்கள் காலில் கத்தி பொருத்தப்பட்டது. இதனால் சேவலின் கத்தி தாக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டது.

பிறகு கடந்த வருடங்களில் மக்கள் பலர் தொடர்ந்து சேவல் சண்டைக்கு அனுமதி கேட்டு வந்ததால் கத்தி பொருத்தக் கூடாது, சேவலுக்கு மது கொடுக்கக்கூடாது உள்ளிட்ட 10 நிபந்தனைகளின் பேரில் கடந்த ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சேவற்கட்டு 4 நாட்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு நேற்று போட்டி தொடங்கியது. ஆனால் அரசின் அனுமதி பெறாமல் கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் ரகசியமாக சேவற்கட்டு நடப்பதாகவும், சேவல்கள் காலில் கத்தி கட்டுவது உள்ளிட்டவற்றை அவர்கள் செய்வதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அந்த பகுதிகளில் மேற்பார்வையிட்ட அரவக்குறிச்சி போலீசார் வெவ்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் 10 பேரை கைது செய்துள்ளனர். அவரகளிடம் இருந்து 8 சேவல்கள், கத்தி, பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதில் மேலும் படிக்கவும் :