1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (18:58 IST)

கண்ணைக் கட்டிக் கொண்டு சாதனை செய்த மாணவன் !

கண்ணைக் கட்டிக் கொண்டு சாதனை செய்த மாணவன் !
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது மாணவர் தண்டபாணி  என்பவர் கண்ணைக் கட்டுக் கொண்டு எந்தப் பொருளைப் பற்றிக் கூறினாலும் அவற்றைப் பற்றி சரியாகச் சொல்லி எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்.
கரூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோவக்குளம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஜெயபால். இவரது மகன் தண்டபாணி(13 வயது). இவர் அருகே உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இவர் தனது கண்களைக் கட்டிக் கொண்டு, எந்தப் பொருளைக் கேட்டாலும் அதைப் பற்றி சரியானபடி கூறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
 
குறிப்பாக, பணத்தைக் கேட்டால், அது குறித்து, கேட்டால் அது என்ன கேட்டாலும் அதன் மதிப்பை சரியாகச் சொல்லி ஆச்சயர்படுத்தினார்.