புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கரூர் அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்பன் ஆலயத்தில் மகர ஜோதி நிகழ்ச்சி

கரூர் அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்பன் ஆலயத்தில் மகர ஜோதி நிகழ்ச்சி – முன்னதாக ஆபரணப்பெட்டிகள் வழிபாடு நிகழ்ச்சியும்,  உற்சவர் வீதி உலா.
நிகழ்ச்சியும் மங்கள வாத்தியங்கள் முழங்க நடைபெற்றது. கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அருகே அமைந்து எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்பன் ஆலயத்தில் இன்று மகர ஜோதியினை  முன்னிட்டு மூர்த்தி ஹோமங்களும், அதனை தொடர்ந்து புனித நீரினை மங்கல வாத்தியங்கள் முழங்க, கோயிலை சுற்றி வந்து மூலவர்  ஐயப்பனுக்கு அபிஷேகங்கள் செய்து பின்னர் ஆபரணப்பெட்டியினை ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக எடுத்து  வரப்பெற்று பின்னர் ஐயப்பன் ஆலயத்தினை வந்தடைந்தது. 
 
பின்னர் ஊர்வலமாக வந்த அருள்மிகு ஸ்ரீ உற்சவர் ஐயப்பன் மற்றும் மகரஜோதிக்கான கற்பூரங்கள் கோயிலை வந்தடைந்து சுவாமி ஐயப்பன் ஆலயத்திற்கு முன்னர் உற்சவர் வைக்கப்பட்டு மகர ஜோதி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கரூர் ஸ்ரீ சிவாச்சாரியார் திலகம்
முரளி சிவாச்சாரியார் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகளை நிகழ்த்தினார். 
 
இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பன் அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை அருள்மிகு  பசுபதீஸ்வரர் ஐயப்பா கோயில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.