திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 மார்ச் 2018 (12:06 IST)

10 லட்சம் தராவிட்டால் என்கவுண்டரில் கொன்று விடுவேன்; தொழிலதிபரை மிரட்டிய இன்ஸ்பெக்டர்

பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்க கரூர் இன்ஸ்பெக்டர் தன்னிடம் 10 லட்சம் கேட்டு மிரட்டியதாக தொழிலதிபர் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்தவர் கோபால். தொழில் அதிபரான இவர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
 
அதில்  கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் தன் மீது பொய்யான திருட்டு வழக்கை பதிந்துள்ளதாகவும், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க ரூ.10 லட்சம் தர வேண்டும் என்றார். பணம் தரவில்லை என்றால் என்கவுண்டரில் சுட்டு கொன்று விடுவேன் என்று கருணாகரன் மிரட்டியதாக மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். 
 
இதனையடுத்து பாதிக்கப்பட்ட கோபாலுக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தொகையை இன்ஸ்பெக்டர் கருணாகரனிடம் இருந்து வசூலித்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.