1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Engineers arrested for bomb threat in chennai airport

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பொறியாளர்கள் கைது

சென்னை
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 2 பொறியாளர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு நேற்று தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்த மர்ம நபர், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். இதையடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
 
இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கூறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், பொறியாளர்கள் இரண்டு பேரை இன்று கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டுரையில்
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது