சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது கண்ணாடிகள் உடைந்து வரும் நிலையில் பயணிகள் ஒருவித அச்சத்துடனே சென்று வருகின்றனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் ஒன்று இன்று காலை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சென்னை விமான நிலையம் முழுவதிலும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்தனர். சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு ஏதும் இல்லாததால் இது வெற்று மிரட்டல் என்று கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் பள்ளிக்கரணையை சேர்ந்தவர்கள் என்பதும், சாப்ட்வேர் எஞ்சினியர்கள் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் இருவரிடமும் மேலும் விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்.