1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : வியாழன், 23 பிப்ரவரி 2023 (23:08 IST)

கரூர் : பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாநகர செயற்குழு கூட்டம்

karur
பாரதிய ஜனதா கட்சியின் கரூர் தெற்கு மாநகர செயற்குழு கூட்டம் கரூர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
 
இந்த செயற்குழு கூட்டத்திற்கு தெற்கு மாநகரத் தலைவர் திரு எஸ். ரவி அவர்கள் தலைமை தாங்கினார். தெற்கு மாநகர பொதுச்செயலாளர்கள் யுவராஜ் மற்றும் சாரங்கபாணி முன்னிலை வகித்தனர்.
 
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டச் செயலாளர் திரு. சக்திவேல் முருகன், மாவட்ட அரசு நலத்திட்ட பிரிவின் தலைவர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டனர். 
 
இக் கூட்டத்தில் தெற்கு மாநகர செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் செயலாளர்கள். வார்டு தலைவர்கள், மாவட்ட.மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
சிறப்பு வாய்ந்த இந்த செயற்குழு கூட்டத்தில் சுக்காலியூர் பகுதியில்  பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இன்னும் வேலை முடித்து பயனாளிகளுக்கு வழங்காமல் நீண்ட காலமாக இருந்து வருகிறது. 
 
நிலையில் கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் இந்த குடியிருப்பு பகுதியை சமூகவிரோதிகள் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள் எனவே முறையாக கட்டி விரைவில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது. 
 
மேலும் சணப்பிரட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகளான சாக்கடை மற்றும் ரோடு வசதிகள் விரைந்து ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
 
தெற்கு மாநகரத்திற்கு உட்பட்ட 17 வார்டுகளிலும் அடிப்படை வசதிகளில் விரைந்து ஏற்படுத்தி தரவேண்டும் என இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
 
பாரதிய ஜனதா கட்சியில் உழைப்பவர்களுக்கு உயர்வு என்ற அடிப்படையில் சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பதவி ஏற்க உள்ள. பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களை இந்த செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
 
ஏப்ரல் மாதம், தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொள்ள உள்ள மாநிலத் தலைவர் திரு கே அண்ணாமலை அவர்களை வரவேற்பதோடு, கரூர் தெற்கு மாநகர பகுதிக்கு வரும் பொழுது பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க வேண்டும் என இந்த செயற்குழு தீர்மானம் நிறைவேற்றுகிறது.
 
மேலும் மக்கள் நலப்பணிகளை கருத்தில் கொண்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன