என்னது சீட் இல்லையா?.. அப்ப ஆதரவு வாபஸ்! – திமுக ஆதரவை வாபஸ் பெற்ற கருணாஸ், அன்சாரி
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவிலிருந்து விலகிய கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் திமுகவுக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டணி, பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் முந்தைய தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி கருணாஸ், மனிதநேய ஜனநாயக கட்சி தமுமுன் அன்சாரி ஆகியோர் நடப்பு தேர்தலில் கூட்டணியில் இருந்து விலகியுள்ளனர்.
இந்நிலையில் திமுகவுக்கு ஆதரவு தருவதாகவும், திமுக வழங்கும் சீட்டுகளை பெற்றுக்கொள்வதாகவும் கருணாஸின் கட்சி சார்பில் திமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு திமுக எந்த எதிர்வினையும் ஆற்றாத நிலையில் தற்போது திமுகவுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
ஆதரவு தெரிவித்ததற்கு எதிர்வினையாற்றாமலும், தொகுதி அளிப்பது குறித்து பேச அழைக்காததாலும் தாங்கள் அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.