அரசியலுக்காக அண்ணாமலை உண்ணாவிரதம் - கர்நாடக முதல்வர்!
கர்நாடக முதல்வர் அரசியலுக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் இருக்கிறார் என பேச்சு.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியை கண்டித்து இன்று தமிழக அளவில் பாஜக போராட்டம் நடத்துகிறது.
தஞ்சை மாவட்டத்தில் பாஜக நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து கர்நாடக முதல்வர், அரசியலுக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் இருக்கிறார்.
இந்த உண்ணாவிரதத்தால் மாறப்போவது எதுவும் இல்லை. மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களுருவில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.