வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (09:00 IST)

நான் அப்படி சொல்லவே இல்லை: முன்னணி ஊடகத்திற்கு கபிலன் வைரமுத்து கண்டனம்!

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, புதிய கல்விக் கொள்கை குறித்து சில கருத்துக்களை ஆவேசமாகவும் அழுத்தமாகவும் தெரிவித்தார். இந்த கருத்துக்கு பாஜக தலைவர்களான தமிழிசை சௌந்தர்ராஜன், எச்.ராஜா உள்பட பலர் கண்டனம் தெரிவித்துக் கொண்டு கொண்டிருக்க பல அரசியல் கட்சி தலைவர்கள் சூர்யாவுக்கு பாராட்டுத் தெரிவி்த்தனர் 
 
இந்த நிலையில் சூர்யாவின் புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து கூறிய கபிலன் என்பவர் புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியதை பேசியதற்கு பதிலாக ரஜினிகாந்த் பேசியிருந்தால் மோடி கேட்டிருப்பார் என்று தெரிவித்தார். ஆனால் இதுகுறித்த செய்தியை வெளியிட்ட முன்னணி ஊடகம், இந்த கருத்தை கபிலன் வைரமுத்து பேசியதாக குறிப்பிட்டிருந்தது
 
இதனை அடுத்து அந்த முன்னணி ஊடகத்திற்கு கபிலன் வைரமுத்து தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தவறானது என்றும் நிகழ்ச்சியில் இந்த கருத்தை பேசியவர் இன்னொரு கபிலன் என்றும், இந்த குறிப்பிட்ட முன்னணி ஊடகத்தின் உருவாக்கத்தில் நானும் பணியாற்றியவன் என்ற முறையில் இந்த தவறு கூடுதலாக வருத்தமளிப்பதாகவும் தயவுசெய்து இந்த தவறை திருத்த வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்