வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 ஜூலை 2019 (22:20 IST)

ரஜினி-ஸ்டாலின் இடையே கலகத்தை மூட்டிய ஜோதிடர்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முடிவை கிட்டத்தட்ட சரியாக கணித்து கூறிய ஜோதிடர் பாலாஜி சமீபத்தில் ஒரு அரசியல் கணிப்பை வெளியிட்டு இருந்தார். அதில் வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் - ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் இடையே தான் போட்டி என்றும் அதில் ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்றும் கூறி இருந்தாராம் இந்த கருத்து ரஜினி ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கருத்தை அவர் கூறுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் அவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினை சந்தித்ததாகவும், அதன் பின்னரே இவ்வாறான கருத்தை அவர் கூறியதாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இதனால் ரஜினியை பார்த்து ஸ்டாலின் குடும்பத்தினர் பயப்படுவதாகவும், ஸ்டாலினுக்கும் ஒரே போட்டியாக ரஜினிகாந்த் இருக்கிறார் என்பதால் அவரை பலவீனப்படுத்த ஜோதிடரை பயன்படுத்தியுள்ளதாகவும் ரஜினி ரசிகர்கள் கொதித்து எழுந்துள்ளனர். 
 
ஆனால் இது குறித்து ஜோதிடர் பாலாஜி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலில் தனித்து நின்றால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறினேனே தவிர அரசியலில் அவர் வெற்றி பெற மாட்டார் எனக் கூறவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் ரஜினி ரசிகர்களோ ஜோதிடரின் விளக்கத்தை ஏற்கவில்லை. ஸ்டாலினை புகழ்வதற்காகவே ரஜினியை அவர் இகழ்ந்துள்ளதாகவும், ஜோதிடத் துறையை அவர் அவமதித்ததுள்ளதாகவும் கருத்து கூறி வருகின்றனர்