திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2023 (16:38 IST)

குமரிக்கடலில் திடீரென ஏற்பட்ட சீற்றம் .. சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி..!

Kanyakumari
கன்னியாகுமரி கடலில் திடீரென சீற்றம் ஏற்பட்டதன் காரணமாக அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கன்னியாகுமரியில் தேவி கோயில், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்ப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு என்பதும் சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பி பார்க்கும் இடம் இடங்களில் ஒன்று காந்தி மண்டபம் என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று திடீரென கடலில் ஏற்பட்டுள்ள சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கன்னியாகுமரி கடலில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
கன்னியாகுமரி கடலில் அலைகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடலில் குளிப்பவர்களை பாதுகாவலர் அப்புறப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் கடல் சீற்றம் காரணமாக திருவள்ளூர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை ஆகியவற்றுக்கு செல்லும் படகுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran