இந்திய பெருங்கடலில் அதி பயங்கர வெப்ப சூறாவளி! – விண்வெளி ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்!
இந்திய பெருங்கடலில் அதி வலுவான வெப்ப மண்டல சூறாவளி உருவாகியுள்ளதாக விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவக்காற்று முடிந்து தற்போது கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் இந்திய பெருங்கடலில் அதி பயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகியுள்ளதை விண்வெளி ஆய்வு மையம் விண்வெளியிலிரிந்து படம் பிடித்துள்ளது.
இந்திய பெருங்கடலில் வேகமாக நகர்ந்து சென்று கொண்டிருக்கும் இந்த சூறாவளி இன்றே மொரிஷியஸை தாக்க உள்ளது. சூறாவளியால் 120 கி.மீ வேகத்திற்கு சூறாவளி காற்று வீசுவதுடன், கனமழை, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிபயங்கர சூறாவளியால் தென் ஆப்பிரிக்கா, மாலாவி, ஜாம்பியா, போட்ஸ்வானா உள்ளிட்ட பகுதிகளிலும் மழை, சூறைக்காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது. புயலின் கண் பகுதி வேகமாக நகரும் வீடியோவை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள நிலையில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K