வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (14:32 IST)

அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி - ஈபிஎஸ்-ஐ சீண்டிய கனிமொழி!

விவசாய கடன்களை ரத்து செய்யததற்கு திமுக எம்.பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு. 

 
கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என கடந்த சில மாதங்களாகவே கோரிக்கை எழுந்து வருகிறது. அடுத்தடுத்த புயல்கள் உள்பட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை திமுக உள்பட அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின.
 
மேலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள அனைத்து விவசாய கடன்கள் தள்ளுபடி என அறிவித்துள்ளார். 
 
இது குறித்து திமுக எம்.பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் “அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி” என பதிவிட்டு தளபது (ஸ்டாலின்) சொல்வதை எல்லாம் செய்ய துடிக்கும் பழனிச்சாமிக்கு நன்றி, வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.