கீழ்தரமான குணத்தைக் காட்டிவிட்டார் கரு.நாகராஜன் – கனிமொழி சாடல்!
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை அவதூறு பேசியதாக பாஜகவை சேர்ந்த கரு.நாகராஜனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் கனிமொழி.
நேற்று நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி ஜோதிமணி மற்றும் பாஜகவை சேர்ந்த கரு. நாகராஜன் ஆகிய இருவரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காரசாரமாக விவாதம் செய்ததால் விவாதத்தின் இடையே திடீரென ஜோதிமணி எழுந்து வெளியேறிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கரு.நாகராஜன் ஜோதிமணியை ஒருமையில் பேசியதாகவும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி அவரை அவமதித்ததாகும் காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கரு.நாகராஜனுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்.பி கனிமொழி “தரம் கெட்டவர்கள்தான் மனிதனையும், பெண்களையும் தரம் பிரிப்பார்கள். தனது கீழ்த்தரமான குணத்தை காட்டியிருக்கிறார் பாஜகவை சேர்ந்த கரு.நாகராஜன்” என கூறியுள்ளார்.
அதேபோல் கரு.நாகராஜனுக்கு ஆதரவாக பாஜகவினர் எம்.பி ஜோதிமணியை கண்டித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்