டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு!
கொரோனா பாதிப்பு காரணமாக மூன்றாம் கட்ட பொது ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை இருந்த நிலையில், நேற்று மாலை நான்காவது கட்ட பொது ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் கிரிக்கெட் லீக் போட்டி இந்த ஆண்டு ஒத்தி வைக்கப்படுவதாக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளதாவது :
ஜூன் மாதம் 10 ஆம் தேதி தொடங்க இருந்த 5 வது தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் லீக் போட்டி ஒத்தி வைக்கப்படுகிறது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிக்கான புதிய அட்டவணை வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது