புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 9 செப்டம்பர் 2019 (12:56 IST)

”எதற்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை”..ஜெயகுமாருக்கு பதிலடி கொடுத்த கனிமொழி

தூத்துக்குடி தொகுதி எம்.பி.கனிமொழி, அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்

அதிமுக அமைச்சர் டி.ஜெயகுமார், திமுக தமிழை வைத்து வியாபாரம் செய்கிறது என சமீபத்தில் திமுகவை கடுமையாக சாடினார். இதனால் திமுகவினர் இணையத்தளத்தில் ஜெயகுமாரை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக எம்.பி.கனிமொழி ஜெயகுமாரின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார்.

திமுக தமிழர்கள் உரிமைக்காகவும், தமிழுக்காகவும் தொடர்ந்து பாடுபடக்கூடிய இயக்கம். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முதலில் கையில் எடுத்தது திமுக தான். ஆனால் அதிமுக இந்தி எதிர்ப்பை ஒரு போதும் மனப்பூர்வமாக கையில் எடுக்கவில்லை என கூறினார்.

அதன் பிறகு ஜெயகுமாரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுப்பது போல், ”எந்த ஒரு நாகரீகமற்ற விமர்சனங்கள் எதற்கும் பதில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை” என கூறினார். கனிமொழியின் இந்த கருத்து அதிமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.