1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2019 (08:31 IST)

புகழேந்தி விக்கெட்டுக்கும் அவுட்டா? காலியாகும் தினகரன் கூடாரம்

அதிமுகவுக்கு பெரும் சவாலாக இருப்பார் என்று கருதப்பட்ட தினகரன், ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்ற பின்னரும், அமமுக என்ற கட்சியை தொடங்கிய பின்னரும், அதிமுகவையும் இரட்டை இலை சின்னத்தையும் விரைவில் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் தினகரனின் செல்வாக்கு கடுமையாக சரிந்தது என்பது தெரிய வந்தது
 
 
இந்த நிலையில் அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி, தங்கத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் திமுகவிற்கும் இன்னும் சில நிர்வாகிகள் அதிமுகவுக்கும் தாவிய நிலையில் தினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வந்தது. இந்த நிலையில் தினகரனின் வலது கரம் என்று கருதப்பட்ட புகழேந்தியும் விரைவில் கட்சி தாவவிருப்பதாக கூறப்படுகிறது
 
 
அமமுகவின் முக்கிய நிர்வாகியான புகழேந்தி கட்சி தாவுவது குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் ’நாம் போகும் இடத்தில் நமக்கு உள்ள இடத்தை சரி செய்துவிட்டு தான் செல்ல வேண்டும். அதனால் அந்த பட்டியலை சேர்த்து ரெடி செய்து வைக்கிறேன். 14 வருஷம் அட்ரஸ் இல்லாமல் இருந்த டிடிவி தினகரனை ஊருக்கு காண்பித்து போராட்டம் எல்லாம் செய்தோம். அம்மா மரணம் அடைந்த போது கூட இவர் இல்லை என்று பேசுவது போல் இருக்கின்றது. இதுவரை இந்த வீடியோவுக்கு புகழேந்தி மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 
எனவே புகழேந்தி விக்கெட்டும் விழப்போவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் அமமுகவில் தலைவர் என தினகரன் மட்டுமே இருக்கும் நிலை ஏற்படும் என்றும் அவரது கட்சியின் கூடாரம் கிட்டத்தட்ட காலியாகிவிட்டது என்றும் கூறப்படுகிறது