1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2017 (11:25 IST)

நமது இயக்கத்தில் இணையுங்கள் - கமல்ஹாசன் பகீரங்க அழைப்பு

தனது பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி முக்கிய அறிவிப்பை அறிவிப்பேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற நவ.7ம் தேதி அவரது பிறந்தநாளன்று அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் ஒரு செய்திதாளுக்கு அவர் அளித்த பேட்டியில் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
 
செய்வார்கள் என காத்திருந்தது போதும். நம்மால் முடியும். கடமையை செய்ய விரும்புபவர்கள் வாருங்கள். இளைஞர்களை ஒன்றிணைக்க வேண்டிய தருணம் இது. கடமையை செய்ய யார் முன்வந்தாலும் அவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். பல்வேறு இயக்கங்கள் நம்முடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறார்கள். வாருங்கள். நியாயத்தூள் கிளப்புவோம்” என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.