செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2017 (15:45 IST)

கமல்ஹாசனுக்கு ஆதரவாக களம் இறங்கிய பி.ஆர்.பாண்டியன் (வீடியோ)

கமல் மற்றும் அரசியல் தலைவர்களின் தொலைநோக்கு கருத்துக்களுக்கு களங்கம் கற்பித்து டெங்கு பாதிப்புகளிலிருந்து திசை திருப்ப தமிழக அரசு முயற்சி செய்கிறது என விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். 


 

 
சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது:
 
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுங்கடங்காத வகையில் பரவி வருகிறது. இறப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. மர்ம காய்ச்சலும் வேகமாக பரவி வருவதாகவும் மக்களிடம் அச்சமேற்ப்பட்ள்ளது. உயிரிழக்கும் நோயாளிகளின் காய்ச்சல் வகை குறித்து ஆய்வு செய்து தெளிவுபடுத்த வேண்டும். 
 
இதற்கு மருத்துவ துறை மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்கிற தோற்றத்தை ஏற்படுத்துவது தவறானது. தமிழக அரசும் முதலமைச்சரும் முழு பொறுப்பேற்க வேண்டும். மேலும் நிலவேம்பு கசாயம், பப்பாளி சாறு ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்ககூடிய அருமருந்து என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் உயிர் இறப்புகளின் எண்ணிக்கையும், நோயாளிகளின் எண்ணிக்கையும் பெருகுவதை பார்த்தால் அது மட்டுமே மரணத்தையும், டெங்கு பரவலையும் தடுத்து விடுமா? என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்ப்பட்டு தமிழகமே பீதியில் உறைந்து கிடக்கிறது.
 
ஆபத்தான நிலையிலிருக்கும்நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப்ப அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதி உள்ளதா என்றால் அதுவும் குறைந்த அளவிலே தான் உள்ளது.மேலும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் கூட அதிதீவிர மருத்துவ வசதி இல்லாததால் கடைசி நேரம் வரை காத்திருந்து மேல் சிகிச்சை என்கிற பெயரில் குறிப்பிட் டசில மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு பரிந்துறைக்கப்படுவதால் உரிய நேரத்தில் உரிய சிகிச்சை பெற முடியாமல் உயிரிழக்கக் கூடிய பேராபத்து  தொடர்கிறது .
 
இந்நிலையில் திரைப்ப நடிகர் கமலஹாசனின் டிவிட்டர் பதிவு மூலிகை மருத்துவத்திற்க்கு எதிரானது என டெங்கு பாதிப்பிலிருந்து தமிழக அரசு திசை திருப்ப முயற்சிப்பது கண்டிக்கதக்கது. மட்டுமல்ல  அரசு தனது பொருப்பை தட்டிக் கழிக்கும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.
 
நெருக்கடியான தருணத்தில் கமல் போன்ற முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் தொலைநோக்கு பார்வையுடன் வெளியிடும் கருத்துகளுக்கு மதிப்பளிக்காவிட்டாலும, கலங்கம் கற்ப்பிக்க முயற்ச்சிப்பது ஜனநாயக குரல் வலையை நெறிப்பதற்க்கு சமமாகும்..
 
பெருகும் உயிரிழப்புகளை தடுக்கும் அவசரக் கால மாற்று மருத்துவ முறைகளையும் கண்டறிய வேண்டும். அடிப்படையாக டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட மர்ம காய்ச்சல்கள் சுகாதார சீர்கேடுகளால் உற்பத்தியாகும் கொசுவால் மட்டுமே பரவுகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டுமானால் கிராமங்கள் முதல் நகரப் பகுதிகள் வரை கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலம்  முழு கவனம் செலுத்த வேண்டும். 
 
ஒவ்வொரு ஊராட்சி மற்றும், நகராட்சி வார்டுக்கும் தனி தனியே கொசு ஒழிப்பு இயந்திரங்கள் மற்றும் அதற்க்கு தேவையான எரிபொருள், மருந்துகள் வழங்கி, துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்திட வேண்டும். கண்காணிக்க உரிய அலுவலர்கள் நியமித்திட வேண்டும். நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்க்கு தேவையான கிருமி நாசினி மருந்துகள் வழங்க வேண்டும். அதற்க்கு தேவையான உரிய நிதியை ஒதுக்கீடு செய்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் துவங்கிட வேண்டுவதோடு. தொடர்ந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
 
ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் டெங்குகாய்ச்சல் உள்ளிட்ட அனைத்து காய்ச்சல்களையும் கண்டறியும் ஆய்வகங்களை உருவாக்கி தொழில் நுட்ப பணியாளர்களையும் நியமனம் செய்திட வேண்டும். நகர வார்டுகள், கிராம ஊராட்சிகளில் சுகாதாரத்தை பாதுகாத்து தொற்றுநோய் பரவாமல் தடுக்க தன்னார்வக் குழுக்கள் ஏற்படுத்தி மக்கள் பங்களிப்போடு தொடர் இயக்கமாக நடைமுறைபடுத்த வேண்டும். 
 
கல்வி கூடங்களை அவ்வபோது தொற்று நோய் பரவாமல் தடுத்திட தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்திட வேண்டும். மருத்துவமனை வளாகங்களில் சுகாதார சீர்கேடுகள் நீடிக்கிறது. கடுமையான கொசு தொல்லை தொடர்கிறது .தங்கி சிகிச்சை பெறும் வார்டுகளிலேயே கடுமையான கொசு தொல்லை தொடர்வதை உடன் ஒழித்திட வேண்டும்.
 
ஆசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றுப் பட்டு அவதூறு பிரச்சாரங்களுக்கு இடமளிக்காமல், அச்சத்தை போக்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். 
 
பேட்டியின் போது தஞ்சை மண்டல தலைவர் டி.பி.கே.இராஜேந்திரன், திருவாருர் மாவட்ட செயலாளர் சேரன் சு.செந்தில்குமார், மன்னார்குடி ஒன்றிய தலைவர் மனோகரன் குடவாசல் ஒன்றிய தலைவர் சரவணன் (எ) குருசாமி ஆகியோர் இருந்தனர்.

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்