ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : சனி, 21 அக்டோபர் 2017 (09:20 IST)

மெர்சலுக்கு கமல் ஆதரவு ; பாஜகவிற்கு எதிர்ப்பு ; விஜய் ரசிகர்கள் நெகிழ்ச்சி

விஜய் நடித்த மெர்சல் படத்தை மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்தக்கூடாது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.


 

 
மெர்சல் படத்தில் நடிகர் விஜய் ஜி.எஸ்.டி பற்றி பேசிய சில வசனங்கள் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்றோர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
அதைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி குறித்த வசனங்களை நீக்க முடிவெடுத்திருப்பதாக படத்தின் தயாரிப்புக் குழு அறிவித்தது. மேலும், தணிக்கை குழுவினரை தாக்கி எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.
 
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மெர்சல் படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் “மெர்சல் தணிக்கை செய்யப்பட்டு விட்டது. விமர்சனங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். விமர்சனம் செய்வோரை மௌனமாக்கக் கூடாது. பேசும்போதுதான் இந்தியா ஒளிரும்” என பதிவிட்டுள்ளார்.
 
இதைத் தொடந்து, தனக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்ததற்காக விஜய் நன்றி தெரிவித்துள்ளார். விஜய் ரசிகர்களும் கமல்ஹாசனுக்கு தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.